Monday 11 July 2016

மகிழ்ச்சியான செய்தி

       
நாம் 24-06-2016  சமர்பித்த மகஜரின் அடிப்படையில் சொசைட்டி நமது தனிநபர் வட்டி கடனை ஒரு சதவீதம் குறைத்துள்ளது. 16%- திலிருந்து 15% ஆக குறைத்த டைரக்டர்கள் குழுவிற்கு  எங்கள நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
இது  இன்று முதல் அமுலுக்கு வருகிறது .

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஆவடியை அடுத்த வெள்ளனுரில் அடுக்கு மாடி குடியிருப்புக்கான வேலைகள் தொடங்க இருப்பதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளது .

இது நமது கூட்டணிக்கு கிடைத்த முதல் வெற்றி ...

தொடர்ந்து நாம் ஊழியர் பிரச்சனையில் சரியான சமயத்தில் தலையிட்டு தீர்வு காண்போம் என்பது உறுதி.  


.






Souirce: Kanchipuram NFTE
 

Wednesday 6 July 2016

78.2% MERGER FOR PENSIONERS
NFTE ACHIEVED ITS WORDS.

Today is the historic day for all the pensioners, family pensioners and working employeesf of BSN..The union cabinet has removed the anomaly by approving 78,,2 %. IDA merger for pensioners and family pensioners too w.e.f.01.01.2007..fixation will take effect from 01.01.07 but arrears be paid from 10.06.2013.Besides thier the cabinet also dispensed the ratio of 60/40 emposed by the DOT on 15.06.2006 .This IS a great achieve end of continuous struggle of the workers. No doubt it is an out come of United struggle but the NFTE alone initiated opposing 60/40 ration as soon as it was notified but some of our friends started to say pensioners is no tension but the NFTE kept the issues highlighted and ultimately all come on the same understanding..NFTE approached up to Primminister in January 2016 and we recievrd a wrtten repply from PMO in which was indicated ahope of settlement.This is a great gain for the workers for which the NFTE is contributed a lot..Thanks and congested to all comrades & friends..

SOURCE: FACE BOOK(C.SINGH) 

IN TAMIL

முயற்சி... திருவினையானது.. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக... நமது ஓய்வு பெற்ற மூத்த தோழர்கள் போராடி வந்த 78.2 சத ida இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை 05/07/2016 அன்று ஒப்புதல் அளித்துள்ளது. 01/01/2007 முதல் 09/06/2013 வரை ஓய்வு பெற்ற தோழர்களும் .. மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுமாக... ஏறத்தாழ 118500 ஓய்வூதியர்கள் இந்தப்பலனை அடைவர். இதனால் அரசுக்கு ஏறத்தாழ 155 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவாகும். 10/06/2013லிருந்து நிலுவையாக 290 கோடி வழங்கப்படும். மேலும் 01/10/2000க்கு முன் ஓய்வு பெற்ற ஊழியர்களின் ஓய்வூதிய செலவை அரசே ஏற்கும் என்றும் அதில் bsnlக்கு தொடர்பில்லை என்றும்... 01/10/2000க்குப் பின் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியச்செலவும் அரசிற்கே பாத்தியப்பட்டது என்றும்... bsnl தனது பங்களிப்பை fr -116ன்படி செலுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நிதி அமைச்சகம் நமக்கு ஏற்படுத்திய 60:40 பங்களிப்பு என்ற பத்தாண்டு அநீதி களையப்பட்டுள்ளது. bsnl உருவாக்கத்தின்போது அரசு அளித்த உறுதிமொழியை தற்போதைய அரசு நிறைவேற்றும் நோக்கிலும், பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும்... மத்திய அமைச்சரவை இம்முடிவை எட்டியுள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஓய்வூதியத்தை உறுதி செய்தது NFTE. ஓய்வூதியம் நிலைத்திட தொடர்ந்து போராடியது NFTE 60:40 பிரச்சினையில் ஆரம்பம் முதல் எதிர்க்குரல் கொடுத்த ஓய்வூதியத்தின் தந்தை தோழர் குப்தாவை நாம் நெஞ்சார நினைவு கூர்கிறோம். சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக... 78.2 பிரச்சினையில் தொடர்ந்து போராடி வெற்றி பெற்ற aibsnlpwa ஓய்வூதியர் சங்கத்திற்கு நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.NFTCL மாநில சங்கம் மனதார பாராட்டுகிறது.
THANKS: ANANDAN, CS,NFTCL, TAMILNADU.