Thursday 30 October 2014

           பிரம்மாண்டமான பாராட்டு விழா !

    ஜபல்பூரில் நடந்த நமது சங்கத்தின் அகில இந்திய  மாநாட்டில்  தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி 
மாநிலம் சார்ந்த  அகில இந்திய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியும்
அவர்களது வருங்கால செயல்பாடு சிறக்க வாழ்த்தவும் தோழர்
 எம்.கே ராமசாமி அவர்கள் தலைமையில் நிகழ்ந்த பாராட்டு விழா பிரம்மாண்டமாய் அமைந்தது.

 மழை அச்சுறுத்தும் வேளையிலும் அரங்கம் நிறைந்த பெருங்
கூட்டத்தை கண்டு வியந்தார் கர்னாடக மாநிலத் தலைவரும் 
பெங்களூரு தொலைபேசி மாவட்டச் செயலருமான தோழர் கிருஷ்ணமோகன். 

தமிழகமும் சென்னை தொலைபேசியும் மீண்டும் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கான துவக்கமாக அமையும் இந்த விழாவை 
மனதார வரவேற்பதாக தோழர் கிருஷ்ணமோகன் அவருக்கே 
உரிய கொஞ்சு தமிழில் கூறியதை அனைவரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். 

தோழர்கள் ஆர்.கே, C.K. மதிவாணன், மாலி, மதுரை சேது, 
எல். சுப்பராயன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை பாராட்டியும், 
மாநாட்டு நிகழ்வுகளை விளக்கியும் உரையாற்றினர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் எம்.அப்பாதுரை 
அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து ,நினைவுபப்பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

கூட்டத்தின் சிறப்பு அம்சமாக BSNLEU சங்கத்திலிருந்து தோழர் யூசுப் பாட்சா தலைமையில் ஏராளமான தோழர்களோடு நமது சங்கத்தில் இணைந்தார்.
 
புதிய நிர்வாகிகள் 

தோழர் கோ.ஜெயராமன், எஸ்.எஸ்.கோபால கிருஷ்ணன் , டி.ஆர்.ராஜசேகரன்,  சிறப்பு அழைப்பாளர்கள் புதுவை P.காமராஜ்,
சென்னை கே.எம்,இளங்கோவன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர் 
மாநில பொருளர் தோழர் ரவி நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.  
 


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday 26 October 2014

நேற்றையதினம் NLC ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக சென்னையில் NFTCL மாநில சங்கம்  ஆர்ப்பாட்டம்  நடத்தியது.


Wednesday 22 October 2014

Monday 20 October 2014

               NFTCL

           மீண்டும் போனஸ் 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட 

வழக்கின் காரணமாக LEO அவர்கள் நடத்திய 

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் CONTRACTOR மற்றும் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றதன் அடிப்படையில் குறைந்தபட்ச   BONUS CONTRACTOR வழங்க   LEO உத்தரவிட்டார்.


கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் நமது 


தோழர்கள் குறைந்த பட்ச BONUS ரூ.3500/- பெற 


வழி வகுத்திட்ட LEO அவர்களுக்கும்,பெற்று தந்த 


மாவட்ட சங்கத்திற்கும், மாவட்ட   நிர்வாகத் 


திற்கும்  நன்றி ... நன்றி ...நன்றி ....


                                     NFTCL CUDDALORE
 
இந்த ஆண்டும் இதுவரை நாம் போனஸ் பெறவில்லை. ஆனால்  ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.3,500 போனஸ் பெற்றுக்கொடுத்த NFTCL  கடலூர் மாவட்டசங்கத்தை  திருவண்ணாமலை கிளை மனதார பாராட்டுகிறது..

Saturday 18 October 2014



திருவண்ணாமலை மாவட்ட 9வது ஏஐடியுசி மாநாடு 17-10-2014 முதல் 18-10-2014 வரை செங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.  17-10-2014ல் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பொது கூட்டத்தில் தோழ டி.எம்.மூர்த்தி மாநில பொதுச்செயலாளர் AITUC சிறப்பிரையாற்றினார்கள்.  18-10-2014 அன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.  அதில் NFTE-BSNL சார்பில் ஆர். செல்வராஜு, கே. இராஜேந்திரன், ந.பாலகிருஷ்ணன் பிரதிநிதிகளாக பங்ககெடுத்தனர். புதிய பொருப்பாளர்களாக தோழர்கள் ஜீவா, எம்.எஸ்.மாதேஸ்வரன், த. இராஜேந்திரன் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர்களாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். புதிய பொருப்பாளர்கள் பணி சிறக்க நமது NFTE-BSNL (INDOOR கிளை)திருவண்ணாமலை சார்பாக வாழ்த்துகிறோம்.








Sunday 12 October 2014


ஜபல்பூரில் அக்-10முதல் 12 வரை நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள்:
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

                                         தலைவர்               : இஸ்லாம் அகமது (டெல்லி)
                                பொதுச்செயலர்   : சந்தேஸ்வர்சிங். (பீகார்)
                                பொருளாளர்         : A.ராஜ்மொவ்ளி

             சம்மேளனச்  செயலர்கள்:  K.S.சேஷாத்திரி (கர்நாடகா)
                                                                    K.K.சிங் (ஜார்கண்ட்)
                                                                     ராஜ்பால் சிங் (டெல்லி என்.பி.ஆர்)
                                                                     N.J.பாட்டியா ( குஜராத்)
                                                                     G.செயராமன்  (தமிழ்நாடு)
                                                                      குல்சார் சிங் (மத்தியபிரதேசம்)
                                                                      S.S. கோபாலகிருஷ்ணன் (தமிழ்நாடு)
                                                                        K.அஞ்சையா (ஆந்திரா)
                                                                      T.R.  ராசசேகரன் (சென்னை)

சிறப்பு அழைப்பாளராக சென்னை தொலைபேசியிலிருந்து தோழர்.K.M.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முழுமையான பட்டியல் பிறகு வெளியிடப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரையும் திருவண்ணாமலை இண்டோர் கிளைச் சங்கம் வாழ்த்துகிறது.

ஏமாற்றம்


NFTE-BSNL லின் 4வது அகில இந்திய மாநாட்டில் பேசிய  CMD அவர்கள்
 " நிதிநிலை தட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க இயலாது " என்று தெரிவித்துள்ளார். இது நமக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Saturday 11 October 2014

NFTE-BSNL 4TH ALL INDIA CONFERENCE AT JABALPUR 2ND DAY SESSION


Friday 10 October 2014

NFTE-BSNL அகில இந்திய மாநாட்டை ஒட்டி 09/10/2014 அன்று செயர்குழு கூட்டம் ஜபல்பூர் ரைட்ன நகர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது.
அதில் தலைவர், பொது செயலாளர், துணைபொது செயலாளர் சம்மேளன செயலாளர் பங்கேற்ற காட்சி.